உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது

செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறு நண்பனை அடித்து கொன்ற வாலிபர் கைது

தானிப்பாடி, தானிப்பாடி அருகே, ஆற்றில் குளிக்கும்போது, செருப்பை பறித்து ஆற்றில் வீசிய தகராறில் வாலிபரை அடித்து கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மணிகண்டன், 21. கடந்த, 5ம் தேதி, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நீரில் இறங்கி மணிகண்டன் குளித்தார். மீண்டும் வீடு திரும்பவில்லை. 6ம் தேதி காலை, உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக ஆற்றில் மீட்கப்பட்டார். தானிப்பாடி போலீசார், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகி இருக்கலாம் என கூறினர். ஆனால், உறவினர்கள் உடலில் காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த கோரி அன்று, அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடற்கூறாய்வில், மணிகண்டன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியை சேர்ந்த, 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், ராகுல், 20, என்பவர் மணிகண்டனை அடித்த கொன்றது தெரியவந்தது. மேலும், நண்பர்களான மணிகண்டன், ராகுல் ஆகிய இருவரும் கடந்த, 5ம் தேதி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, மணிகண்டனின் செருப்பை பறித்து, விளையாட்டாக ராகுல் ஆற்றில் வீசினார். இதில், ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, ராகுல் தாக்கியதில் மணிகண்டன் பாறையில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ச்சியடைந்த ராகுல், அங்கிருந்து தப்பியுள்ளார். இதனிடையே தானிப்பாடி போலீசார், நேற்று முன்தினம் இரவு, ராகுலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை