உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் இன்று மே தின பொதுக்கூட்டம்

திருச்சியில் இன்று மே தின பொதுக்கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும். எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மூன்று இடங்களில் மே தினப் பொதுக்கூட்டங்கள் இன்று நடக்கிறது.ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட சோமரசம்பேட்டையில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில், தலைமைக்கழகப் பேச்சாளர்கள் திருப்பூர் விசாலாட்சி, தீப்பொறி கார்த்திகேயன் பேசுகின்றனர்.திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் அண்ணாமராட்டா அருகில் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில், முகவை கண்ணன் பேசுகிறார். மேற்கு தொகுதிக்குட்பட்ட பீமநகர் கூனிபஜாரில் மாலை நடக்கும் கூட்டத்தில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணைச்செயலாளர் முகில், கோவை ராஜகோபால் பேசுகின்றனர்.கூட்டத்தில், எம்.பி.,குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை ஜெயபால் உட்பட பலர் பங்கேற்கின்றனர். கட்சியின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை