உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சிறுமியை பலாத்காரம் செய்த தி.மு.க., செயலர், நண்பர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த தி.மு.க., செயலர், நண்பர் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெரமங்கலம் மணியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 44. இவரது நண்பர் கண்ணன், 32. கூலித் தொழிலாளர்கள். ராஜ்குமார், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலராக உள்ளார். இவர்கள் இருவரும் இரு மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தனர். கொலை மிரட்டல் விடுத்ததால், அவர்களைப் பற்றி யாரிடமும் சிறுமி சொல்லவில்லை.இந்நிலையில், சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவரிடம் பெற்றோர் விசாரித்ததில், ராஜ்குமாரும், கண்ணனும் தன்னை பலாத்காரம் செய்ததை சிறுமி கூறினார். புகாரின்படி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், நேற்று காலை ராஜ்குமாரையும், கண்ணனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி