உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரவுடியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் என்கவுன்டர் பீதி: கலெக்டர் வீடு முற்றுகை

ரவுடியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் என்கவுன்டர் பீதி: கலெக்டர் வீடு முற்றுகை

திருச்சி:திருச்சி அருகே ரவுடியை போலீசார் அழைத்துச் சென்றதால், என்கவுன்டர் பீதியில் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசம் கட்சியினர் கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், குழுமணி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் என்கிற மணிகண்டன், 34. பிரபல ரவுடியான இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்பட, 16 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திருச்சி எஸ்.பி., தனிப்படை போலீசார், மணிகண்டனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இதனால் அவர் என்கவுன்டர் செய்யப்படுவார் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன் மனைவி பிரேமா உள்ளிட்ட உறவினர்களும், தமிழர் தேசம் கட்சியினரும், திருச்சி, காஜாமலை பகுதியில் உள்ள கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., கோடிலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை முடிந்ததும் அனுப்பி வைக்கப்படுவார் என்று உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.இந்நிலையில், கோப்பு பகுதியில் அரிவாளை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி மணிகண்டனை தட்டிக்கேட்ட, ஜீயபுரம் போலீஸ்காரர் ஸ்டாலின் ராஜ் என்பவர் அளித்திருந்த புகாரின் பேரில், நேற்று காலை மணிகண்டன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வீச்சரிவாள், பல்சர் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மதியம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன், பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை