மேலும் செய்திகள்
இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!
21-Feb-2025
மணப்பாறை; நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மணப்பாறை நகராட்சி டூ - வீலர் ஸ்டாண்டில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான, 6 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது.திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சார்பில் நடத்தப்படும் ஸ்டாண்டில், டூ - வீலர் நிறுத்த, 12 மணிநேரத்துக்கு 6 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகமோ, தனியார் ஆட்களை நியமித்து 6 ரூபாய்க்கு சீட்டு கொடுத்து விட்டு, 15 ரூபாய் அடாவடியாக வசூலித்து வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல், டூ - வீலர் ஸ்டாண்டில் கட்டணம், 6 ரூபாய் மட்டும் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், நகராட்சி வருவாய் துறை பணியாளர்கள், டூ - வீலர் ஸ்டாண்டில் பணி அமர்த்தப்பட்டனர்.
21-Feb-2025