உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காணாமல் போனவர் உடல், பைக் மீட்பு

காணாமல் போனவர் உடல், பைக் மீட்பு

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கோரைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ், 44. இவர், 1ம் தேதி பைக்கில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் அவரை தேடி வந்தனர்.இந்நிலையில், ஆமணக்கம்பட்டி, பொன்னன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. சென்று பார்த்தபோது, 65 அடி ஆழ கிணற்றில், 40 அடி தண்ணீரில் ஆண் சடலம் மிதந்தது.மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டபோது, கிணற்றில் பைக் கிடந்ததையும் கண்டுபிடித்து மீட்டனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ராமராஜ், போதையில் பைக்குடன் கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என்ற கோணத்தில் மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை