உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணல் மாட்டு வண்டி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மணல் மாட்டு வண்டி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருச்சி,:திருச்சியில், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு கொடுத்தனர்.திருச்சி மாவட்டத்தில், மாட்டு வண்டி மணல் குவாரிகள் 11 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு., மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து, திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.தொடர்ந்து, தலெக்டர் அலுவலகம் முன், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமை ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள், கலெக்டர் பிரதீப்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை