உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஓசி பட்டாணி வாங்கிய எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

ஓசி பட்டாணி வாங்கிய எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம்:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் அருகே, ராஜன் பிரேம்குமார் என்பவர் பட்டாணி கடை உள்ளது. நேற்று முன்தினம், கடையில் அவரது மகன் இருந்தபோது, ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ள ராதாகிருஷ்ணன், 54, என்பவர், வறுத்த வேர்க்கடலையும், பட்டாணியும் கேட்டதாகக் கூறப்படுகிறது. கடையில் இருந்தவர் பட்டாணிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், 'எஸ்.ஐ.,யிடமே காசு கேட்கிறாயா' என்று கேட்டு, 'கடையை பூட்டி விடுவேன்' என்று மிரட்டினார்.மேலும், சிறிது நேரத்தில் இரு போலீசாரை அழைத்து வந்து, கடையில் இருந்த ராஜன் பிரேம்குமார் மற்றும் அவரது மகனை மிரட்டி, தகராறில் ஈடுபட்டு, வறுகடலையும், பட்டாணியும் வாங்கிச் சென்று விட்டார்.கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆதாரத்துடன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் நேற்று முன்தினம் ராஜன் பிரேம்குமார் புகார் அளித்தார். விசாரித்த கமிஷனர் காமினி, எஸ்.எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று காலை உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி