உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

திருச்சியில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி: அவர் சொல்லும் காரணம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாவட்டம் ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் (வயது 50) பிரதமர் மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டி நாள் தவறாமல் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதன் காரணமாகவே இக்கோயில் கட்டியதாக விவசாயி சங்கர் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, ஏற்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயம் செய்து வருகிறார். அவர் பிரதமர் மோடிக்கு கோயில் ஒன்றைக் கட்டி நாள் தவறாமல் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iu3quu5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சங்கர் கூறியதாவது: என்னுடைய சொந்த நிலத்தில், கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முதலாக பிரதமர் மோடிக்கு கோயில் கட்டினேன். சுமார் 1.25 லட்சம் ரூபாய் சொந்தமாக செலவு செய்து ஆறு மாதங்களில் கோயில் கட்டினேன். தேங்காய் மாங்காய், மரவள்ளி போன்ற விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், பிரதமர் மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன். மோடி மூன்றாவது முறை பிரதமாக வேண்டும், என்று பழநிமலை முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

அன்னதானம்

அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், வரும் தை மாதம் முடிந்த உடன், தங்கத் தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடா வெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன். பிரதமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. 2030ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சங்கரநாராயணன்
ஜூலை 15, 2024 20:12

நேர்மையான நல்லாட்சி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச்செய்த மோடிக்கு கோயில் கட்டலாம். ,தமிழ்நாட்டில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும் விற்பவனுக்கு சமாதிதான் கட்டலாம்


venugopal s
ஜூலை 15, 2024 17:28

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் எண்ணிக்கை நிறையவே பெருகி விட்டது!


S Natarajan
ஜூலை 15, 2024 07:04

குக்ஷ்புவிற்கும் திருச்சியில் கோயில் கட்டினார்கள்


சண்முகம்
ஜூலை 15, 2024 02:46

மனநிலை குன்றியவரோ?


venugopal s
ஜூலை 14, 2024 20:58

தமிழக பாஜகவினரே பணம் கொடுத்து இது போல் செய்யச் சொல்லி இருப்பார்களோ?


சொல்லின் செல்வன்
ஜூலை 14, 2024 20:45

தான் கடவுளின் தூதன் என்று மோடி கூறியதை இவரு நம்பிட்டாரு போல


Bala
ஜூலை 14, 2024 19:33

தமிழ்நாட்டில் உள்ள வந்தேறிகளின் செயல்கள் ?


naranam
ஜூலை 14, 2024 23:27

இதைச் சொல்வது ஒரு சிங்கப்பூர் வந்தேறி!


Velan
ஜூலை 14, 2024 17:50

ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசைதான் காரனம்


Muthu Kumar
ஜூலை 14, 2024 18:20

200ups


Palanisamy Sekar
ஜூலை 14, 2024 17:20

இது இப்படி இருக்க, திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு அளிப்பார் கஞ்சா செடியை பயிரிட்டு மகசூலில் சாதனைபுரிந்து விற்க துணையிருக்கும் காக்கிகளுக்கும், வட்டம் மாவட்டங்களுக்கும் ஒன்றியங்களுக்கும் கவுன்சிலருக்கும் பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் மோடிஜியின் ஆதரவில் வருடந்தோறும் ஆறாயிரம் ரூபாய் செலுத்துகின்ற பிரதமரின் செயலுக்கு நன்றிக்கடனாகவே இந்த கோவிலும் பூஜைகளும். இதுதான் திராவிட மாடல் அரசியலுக்கும், தேசீய சிந்தனை உள்ளவர்களுக்குமான வித்யாசம்


Palanisamy Sekar
ஜூலை 14, 2024 17:17

கஷ்டப்பட்டு உழைத்து வந்ததால் மோடிஜியின் அருமை தெரிகின்றது இவருக்கு. கள்ளச்சாராயம் காய்ச்சி கட்சியை நடத்துவோருக்கும், விற்போருக்கும் இதுபற்றி தெரியாது. போதையில் தள்ளாடுகின்ற நபர்கள் மோடியை வெறுப்பார்கள். உண்மையான உழைப்பாளிக்கு அவரது அருமை தெரிகின்றது. இது பெருமைக்காக கட்டியதல்ல.. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..


சமீபத்திய செய்தி