உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்றவர் பணம் எடுக்க வந்தவரை பார்த்து ஓட்டம்

ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்றவர் பணம் எடுக்க வந்தவரை பார்த்து ஓட்டம்

திருச்சி:திருச்சி, தில்லை நகர் பிரதான சாலையில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிஅளவில், அதே பகுதியை சேர்ந்த ஜாவித் அகமது என்ற வாலிபர் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார்.அப்போது, மையத்திற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர், ஏ.டி.எம்., இயந்திரத்தை இரும்பு ராடால் நெம்பி உடைத்துக் கொண்டிருந்தார். இந்த கொள்ளை முயற்சியை பார்த்து ஜாவித் அகமது பதற்றமாகி கூச்சலிட்டார்.அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கொள்ளையர், உடனடியாக கத்தியை காட்டி அவரை மிரட்டி, ஏ.டி.எம்., மையத்தில் இருந்து வெளியேறினார். வெளியே கொள்ளையனுடன் வந்த மற்றொருவர் நின்றிருந்தார். இருவரும் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.இது குறித்த தகவல்அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஏ.டி.எம்.,மிற்குள் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி