உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இளம் பெண், வாலிபர் கொலை?

இளம் பெண், வாலிபர் கொலை?

திருச்சி::திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே, சீத்தப்பட்டியை சேர்ந்தவர் கீர்த்தனா, 25, திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. காட்டுப்புத்துாரில் பள்ளியில் வேலை பார்த்த இவருக்கும், அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 29, என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காட்டுப்புத்துாரில் தோட்ட மோட்டார் அறையில், இருவரும் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். கிருஷ்ணமூர்த்தியின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. காட்டுப் புத்துார் போலீசார், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !