உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தனியார் கல்லுாரி பஸ் விபத்தில் 10 மாணவ - மாணவியர் காயம்

தனியார் கல்லுாரி பஸ் விபத்தில் 10 மாணவ - மாணவியர் காயம்

திருச்சி:திருச்சி அருகே பிரேக் பிடிக்காத தனியார் கல்லுாரி பஸ் விபத்தில் சிக்கியதில், 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் காயமடைந்தனர். பெரம்பலுார் தனியார் கல்வி நிறுவனத்துக்கு செல்ல, நேற்று காலை, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், மாணவர்களை ஏற்றி கொண்டு கல்லுாரி பஸ் புறப்பட்டது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சஞ்சீவி நகர் அருகே கல்லுாரி பஸ் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பஸ் மீது மோதியது. இதில், கல்லுாரி பஸ்சில் பயணித்த, 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லுாரி பஸ்சில் பிரேக் பிடிக்காததால், விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. திருச்சி மாநகர போக்கு வரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி