உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்

32 ஊராட்சி இணைப்பு திருச்சி மேயர் தகவல்

திருச்சி:திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது:-திருச்சி மாநகராட்சியுடன், 32 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக மிகப்பெரிய மாநகராட்சியாக திருச்சி தரம் உயரும்.தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் திருச்சிக்கு பெறப்படும். வரும் அக்டோபரில் திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.துாய்மை மாநகராட்சி திருச்சிக்கு, முதல்வரிடம், 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்று, அந்த தொகை வங்கியில் டிபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி, மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்விக்கு செலவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதி இன்றி செயல்படும், தள்ளுவண்டி கடைகள், உணவகங்களை விரைவில் அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ