உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்ட 5 பேர் கைது

காளை முட்டி டிரைவர் பலி அவிழ்த்து விட்ட 5 பேர் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த பலர் உரிய முன் அனுமதியின்றி தங்களின் ஜல்லிக்கட்டு காளைகளை கோவில் முன் அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளில் ஒன்று கோவில் அருகே நின்றிருந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனை முட்டியது.இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலகிருஷ்ணன் மனைவி தனலட்சுமி கல்லக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து உரிய அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட அதே ஊரைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ