போதை பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது
திருச்சி: தி ருச்சியில், ஹோட்டலில் அறை எடுத்து போதை மாத்திரைகள், ஊசிகள் பயன்படுத்திய, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள எஸ்.ஜே., லாட்ஜில், சிலர் அறை எடுத்து போதை பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோட்டை போலீசார் அங்கு சோதனையிட்ட போது, திருச்சி மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த ஏழு பேர் போதை மாத்திரைகளை உட்கொண்டும், போதை ஊசி செலுத்தி இருந்ததும் தெரிந்தது. போதை ஆசாமிகள் ஏழு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செ ய்து விசாரிக்கின்றனர்.