உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாஜி மந்திரி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

மாஜி மந்திரி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

திருச்சி:திருச்சி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 61. இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருத்தரைப்பட்டியில், 80 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த, 2017ல் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், தன் நண்பர் காமராஜ் மூலம் அந்த நிலத்தை கேட்டு லோகநாதனிடம் பேசி, அட்வான்ஸ் தொகை வழங்கினார். ஆனால், பேசியபடி பணம் கொடுக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நிலுவை வழக்குகளை விசாரணைக்கு எடுத்த திருச்சி நீதிமன்ற நீதிபதி பாலாஜி, இந்த வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு நேற்று மாற்றி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை