ஜாதி மோதல் 12 கைதிகள் இடமாற்றம்
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி கைதிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது மயிலாடுதுறையை சேர்ந்த கொலை வழக்கு கைதி சதீஷ், நாங்குநேரியைச் சேர்ந்த கைதி சிவா ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து சதீஷ் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், சிவா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சிறைக்குள் மோதலில் ஈடுபட்டனர். சதீஷுடன் இணைந்து அவர் சமுதாயத்தை சேர்ந்த நாகராஜ், சத்தியசீலன், வாசு, சந்திரமோகன், கதிரவன் எதிர்தரப்பில் சிவாவுடன் சேர்ந்து அவர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ், மோகன், தவக்குமார், தேவதாஸ், ராஜபாண்டி ஆகியோர் மோதிக்கொண்டனர். இதையடுத்து, சதீஷ், தேவதாஸ், சுரேஷ் ஆகியோர் புழல் சிறை; நாகராஜ், சத்தியசீலன், சந்திரமோகன் ஆகியோர் வேலுார் சிறைக்கு மாற்றப்பட்டனர். வாசு, கதிரவன் ஆகியோர் சேலம் சிறை; ராஜபாண்டி, தவக்குமார் கடலுார் சிறை; சிவா, மோகன் ஆகியோர் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.