உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேர்மனை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி டவுன் பஞ்.,சில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த ஆலீஸ் செல்வராணி சேர்மனாக உள்ளார். நேற்று காலை கவுன்சிலர்கள் கூட்டம் துவங்கியதும், தி.மு.க.,வை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள் எழுந்து நின்று, 'எங்கள் வார்டில் எந்த அடிப்படை வசதிகளும், பலமுறை கோரிக்கை விடுத்தும் செய்து தரப்படவில்லை' என, சேர்மன் ஆலீஸ் செல்வராணியை பார்த்து குற்றஞ்சாட்டினர்.ஆத்திரமடைந்த, ஐந்து தி.மு.க., கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தவர்களில் ஒருவரான கோகிலா, புள்ளம்பாடி நகர தி.மு.க., செயலர் முத்துக்குமாரின் மனைவி, தி.மு.க., சேர்மனை கண்டித்து, அக்கட்சி கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை