| ADDED : ஆக 07, 2011 01:58 AM
மண்ணச்சநல்லூர்: திருச்சி பாரதிதாசன் பல்கலை இணைவு பெற்ற கல்லூரிகளில் முதன்முறையாக மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியில் 25 தன்னார்வ மாணவியர் மூலம் சட்ட உதவி மையம் மற்றும் சட்ட விழிப்புணர்வு குழுமம் துவங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் நடந்த இதற்கான விழாவில் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கோகுல்தாஸ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில், சார்பு நீதிபதி நவமூர்த்தி, மத்திய அரசின் உயர்நீதிமன்ற மூத்த வக்கீல் ராஜகோபால், திருச்சி மாவட்ட மூத்த வக்கீல்கள் மனோகரன், திவ்ய ராணி, கென்னடி மற்றும் மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்துறை பேராசிரியை, அகிலாண்டேஸ்வரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் துணை முதல்வர் கங்காதேவி, பேராசிரியர்கள் ஸ்ரீராம், சுரேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.