| ADDED : ஆக 07, 2011 01:59 AM
திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் பெண்ணிடம் செயின் பறித்த பெண்ணை பொதுமக்ளக் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். திருச்சி ஏர்ப்போர்ட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சங்கீதா. இவர், மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகியாக உள்ளார். நேற்று காலை இவர், சொந்த வேலையாக திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது, நெரிசலைப்பயன்படுத்தி அவரது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை ஒரு பெண் பறித்துக் கொண்டு வேகமாக ஓடினார். சங்கீதா, 'திருடி..திருடி..' என கூச்சலிடவே அக்கம் பக்கம் நின்றிருந்த பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அந்த பெண்ணை துரத்திப்பிடித்து, புறக்கவால் நிலையத்தில் ஒப்படைத்தனர். முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறுவதால், அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.