உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / டி.எஸ்.பி.,யை கண்டித்து வக்கீல் கோர்ட் புறக்கணிப்பு

டி.எஸ்.பி.,யை கண்டித்து வக்கீல் கோர்ட் புறக்கணிப்பு

முசிறி: முசிறி குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றை சேர்ந்த வக்கீல்கள் முசிறி டி.எஸ்.பி.,யைக் கண்டித்து தொடர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முசிறியில், வக்கீல்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணை செயலாளர் தனபால், செயலாளர் பிரபாகரன், இணை செயலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த 8ம் தேதி இரவு 11 மணி அளவில் திருச்சியில் இருந்து முசிறிக்கு வந்த வக்கீல் ரவிசங்கரை முசிறி டி.எஸ்.பி., நடராஜ் லத்தியால் அடித்து மரியாதை குறைவாக நடந்து கொண்டார். இதைக் கண்டித்து திருச்சி எஸ்.பி., டி.ஐ.ஜி., காவல் துறை தலைவர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், காலவரையற்ற தொடர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், பொருளாளர் ஞானசேகர், மூத்த வழக்கறிஞர்கள் ரத்தினவேல், பாஸ்கரன், பிச்சைப்பிள்ளை, விவேக், செங்குட்டுவன், கணபதி, முத்துச்செல்வன், சங்கிலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை