உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாநகராட்சி அதிரடி அனுமதியற்ற மின் மோட்டார்கள் பறிமுதல்

மாநகராட்சி அதிரடி அனுமதியற்ற மின் மோட்டார்கள் பறிமுதல்

திருச்சி: வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வந்த வீடுகளில் இதுவரை 30 மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் சப்ளையாவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி கமிஷனர் வீர ராகவராவ் மாநகராட்சி பகுதியிலுள்ள குடிநீர் குழாய் இணைப்பில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுக்கப்படுகிறதா? என சோதனை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி இன்ஜினியர்கள் மற்றும் அலுவலர்கள் குடிநீர் சப்ளையாகும் நேரத்தில் வேகத்தை கண்காணித்து, வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனடிப்படையில், கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 49வது வார்டு, தென்னூர், காஜா தோப்பு, பகுதிகளில் கண்காணித்த போது இரண்டு வீடுகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டு மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த திடீர் சோனையில் ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்டங்களில் 28 மின் மோட்டார் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதுவரை மொத்தம் 30 மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சமமான அளவு குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலர்கள் குடிநீர் விநியோகத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சட்ட விரோதமாக குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால், மின் மோட்டார் பறிமுதல் செய்வதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியது வரும். ஆகவே, பொது மக்கள் வீடுகளில் உள்ள மின் மோட்டார்களை தாங்களே முன் வந்து அகற்றி கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை