உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பள்ளி மாணவியிடம் தங்க நகை வழிப்பறி

பள்ளி மாணவியிடம் தங்க நகை வழிப்பறி

திருச்சி: ப்ளஸ் 2 மாணவியிடம் இரண்டரை பவுன் தங்கச் செயினை பறித்த வழிப்பறி வாலிபர்களை போலீஸார் தேடுகின்றனர்.திருச்சி தென்னூர் அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் சபா ரத்தினம் மகள் சிந்தியா (17). ப்ளஸ் 2 மாணவியான இவர் நேற்று முன்தினம் இரவு டியூஷன் சென்றுவிட்டு, நடந்தே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவ ரை பைக்கில் பின் தொடர்ந்த இரண்டு வாலிபர்கள், திடீரென சிந்தியாவை தாக்கி, கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். தில்லைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை