உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காந்தி மார்க்கெட்டில் இன்று குடிநீர் "கட்

காந்தி மார்க்கெட்டில் இன்று குடிநீர் "கட்

திருச்சி: 'பிரதான குழாய் உடைப்பு காரணமாக, காந்தி மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (22ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது' என, மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான உந்துக்குழாயில், ஜோசப் கல்லூரி வளாகம் அருகில் மற்றும் கோட்டை ஸ்டேஷன் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மரக்கடை, விறகுபேட்டை, தாராநல்லூர், மேலப்புலிவார்டு சாலை, கீழ தேவதானம், பாலக்கரை, வரகனேரி, காந்தி மார்க்கெட், மதுரை சாலை, மகாலெட்சுமி நகர் மற்றும் உறையூர் பகுதியில் இன்று (22ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை (23ம் தேதி) முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை