உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாலிடெக்னிக் மாணவர்களை தாக்கி நகை, பணம் பறித்த கும்பல் கைது

பாலிடெக்னிக் மாணவர்களை தாக்கி நகை, பணம் பறித்த கும்பல் கைது

திருச்சி,:திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். மே 17 இரவு, விடுதி மாணவர்களை தாக்கிய மர்ம கும்பல், மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தங்கம், வெள்ளி நகைகள், மொபைல் போன், பணத்தை பறித்து தப்பியது.மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த வினோத், சந்தோஷ் ஆகிய மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சமயபுரம் போலீசார் விசாரித்தனர். திருச்சி எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவில், லால்குடி டி.எஸ்.பி., தினேஷ்குமார் தலைமையிலான இரு தனிப்படை போலீசார், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியில், ஓர் அறையை நேற்று முன்தினம் மாலை சுற்றி வளைத்தனர்.அங்கிருந்தவர்களை விசாரித்ததில், திருச்சி, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த சரண், 19, முருகன், 19, தங்கமுத்து, 19, ரங்கசாமி, 19, நடராஜ், 19, மற்றும் 17 வயது நான்கு சிறுவர்கள் என்பதும், தாக்குதல் மற்றும் நகை, பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 மொபைல் போன்கள், லேப்டாப், 2,300 ரூபாயை பறிமுதல் செய்து, ஒன்பது பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ