மேலும் செய்திகள்
கார் டிரைவர் கொலை
19-May-2025
கொள்ளிடம் : திருச்சி, கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார், 40; இவர், பிரகாஷ் என்ற கபடி வீரரை 2022ல் கொலை செய்த வழக்கில் சிக்கி, ஜாமினில் வந்துள்ளார்.கபடி வீரர் நினைவாக, கிளிக்கூடு கிராமத்தில் கபடி போட்டி நடந்துள்ளது. முன்னாள் பஞ்., தலைவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன் போட்டியை நடத்தியுள்ளார். இதனால், அசோக்குமார், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, அரிவாளுடன், தன் நண்பர்கள் இருவருடன், பாலகிருஷ்ணன் வீடு முன் ரகளை செய்தார்.ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் பிரவீன், 30, வழக்கறிஞர் சின்னதம்பி, 28, வேலாயுதம், 35, ஆட்டோ டிரைவர் பிரகாஷ் ஆகியோர் ரவுடியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து, ஐவரையும் தேடி வருகின்றனர். கபடி வீரர் கொலைக்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
19-May-2025