உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி: விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வந்த, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 'ஏர் இந்தியா' விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவரிடம், 4 கிலோ 'ஹைட்ரோ போனிக்' எனும் உயர் ரக கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹமீது, 24, என்பவரிடம் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு, 4 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ