மூதாட்டியை கொன்று 3 சவரன் நகை திருட்டு
திருச்சி:மணப்பாறை அருகே, மூதாட்டியை கொன்று, 3 சவரன் நகைகளை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை தெரசு, 65; இவரது மகன், மகள் திருமணமாகி திருச்சியில் வசிக்கின்றனர். கணவன் இறந்து விட்டதால், பெரிய குளத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டில், அவர் மட்டும் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் தாழ்வாரத்தில் படுத்து துங்கிய அவரை, மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்து, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயின், ஒரு சவரன் தங்கக் காசு ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். வையம்பட்டி போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.