மேலும் செய்திகள்
போதை தந்தையால் மகன் கைது
13-Apr-2025
ஸ்ரீரங்கம்:மதுபோதையில் தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்தவர் சோமசுந்தரம், 45. இவர், சமயபுரத்தில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்தார். இவரது மனைவி சித்ரா, மகன் மோகன்ராஜ், 19. மகன் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டீக்கடை மாஸ்டராக உள்ளார். சோமசுந்தரம் சமயபுரத்தில் ஒரு பெண்ணை குடிவைத்து, அவருடனும் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து அடிக்கடி கேட்டு, தந்தையிடம் மோகன்ராஜ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று காலை மதுகுடித்து வந்த மோகன்ராஜ், தந்தையிடம் தகராறில் ஈடுபட, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டின் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து, தந்தையின் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த சோமசுந்தரம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர்.
13-Apr-2025