உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாணவி தற்கொலை; உறவினர்கள் மறியல்

மாணவி தற்கொலை; உறவினர்கள் மறியல்

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆசிரமப் பள்ளியில் தெற்கு சித்தாம்பூர் அஞ்சலை மகள் ஹரிணி 16, படித்தார். பள்ளி விடுதியில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம் அவரது தாய்க்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், ஹரிணி சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை வாசலில் நேற்று காலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துக் கொண்டதால் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ