உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / குளத்தில் கிடக்கும் முதலை; குளிக்க வருபவர்கள் அதிர்ச்சி

குளத்தில் கிடக்கும் முதலை; குளிக்க வருபவர்கள் அதிர்ச்சி

திருச்சி:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கிராமத்தில் கல்லறைக்குளம் என்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் உள்ளது. இக்குளத்தில், கிராமத்தினர் குளிப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் குளத்தில் குளித்தவர்கள், முதலை இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த வனத்துறையினர், 'குளத்தில் முதலை உள்ளது. எச்சரிக்கை' என, எச்சரிக்கை போர்டு மட்டும் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்; முதலையை பிடிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. விடுமுறை நாட்களில் இக்குளத்தில் சிறுவர் - சிறுமியர் அச்சத்துடன் குளிக்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன், வனத்துறை அதிகாரிகள் குளத்தில் கிடக்கும், 10 கிலோ வரை எடை கொண்ட முதலையைப் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், வனத்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், குளிக்க வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ