உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சில்மிஷ மேலாளர் சிக்கினார்

சில்மிஷ மேலாளர் சிக்கினார்

திருச்சி: திருச்சி மாவட்டம், பாலக்கரை, துரைசாமிபுரம் விஸ்தரிப்பை சேர்ந்தவர் சையத் அப்துல் ரகீம், 30; மாநகராட்சி ஒப்பந்த பணிகளை செய்யும் எஸ்.ஆர்., வேதா நிறுவனத்தில், மண்டல மேலாளராக பணியாற்றுகிறார். எதிர்வீட்டில் வசிக்கும் சிறுமியிடம், இவர், தன் வீட்டுக்கு வருமாறு சைகை காட்டி, நிர்வாணமாக நின்றுள்ளார்.அதை சிறுமி, தாயிடம் கூறினார். அப்பகுதி இளைஞர்கள் சிலர், சையத் அப்துல் ரகீமை அடித்து, உதைத்து, பாலக்கரை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். சையத் அப்துல் ரகீம் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை