உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விபத்தில் மூவர் மரணம் டிரைவருக்கு 30 ஆண்டு

விபத்தில் மூவர் மரணம் டிரைவருக்கு 30 ஆண்டு

திருச்சி:டிப்பர் லாரி ஆட்டோ மீது மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட மூவர் பலியான வழக்கில், டிப்பர் லாரி டிரைவருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அருகே 2024 பிப்., 29ம் தேதி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, எதிரே வந்த ஆட்டோ மீது மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் திருப்பராய்த்துறை அரவிந்த், 28, ஆட்டோவில் பயணித்த சுசீலா, 65, அவரது மகன் சரவணன், 40, ஆகிய மூவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜீயபுரம் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் வெள்ளிராஜா, 42, லாரி உரிமையாளர் பாஸ்கர், 42, ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் வெள்ளிராஜாவுக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாஸ்கர் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை