உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தந்தையை கொன்ற வளர்ப்பு மகன் கைது

தந்தையை கொன்ற வளர்ப்பு மகன் கைது

மணப்பாறை: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஆலத்தூர், களத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகு (55). இவருக்கு ராசுக்குட்டி (33), செந்தில்குமார் (24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வளர்ப்பு மகனான ராசுக்குட்டி, தனது மனைவி குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, 'ஒரே வீட்டில் இருக்காதே தனிக்குடித்தனம் சென்றுவிடு' என்று அழகு தெரிவித்ததால் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அழகு, ராசுக்குட்டியை 'அனாதை' என்று திட்டியுள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளான ராசுக்குட்டி கடந்த 13ம் தேதி இரவு 2 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை அழகுவை அரிவாளாளல் வெட்டி கொலை செய்து தப்பியோடினார். வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அதிவீர ராம பாண்டியன் வழக்குப்பதிவு செய்து, ராசுக்குட்டியை தேடி வந்தார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பஸ்ஸூக்காக காத்திருந்த ராசுக்குட்டியை போலீஸார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை