| ADDED : செப் 01, 2011 01:47 AM
முசிறி: முசிறி வேளாண்மை கோட்டத்தில் உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில், எண்ணெய் வித்து சாகுபடி பயிற்சி முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த முகாமிற்கு உதவி இயக்குனர் ராசாமணி வரவேற்றார். திருச்சி வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் பொன்னுசாமி எண்ணெய் வித்து பயிர்கள் பற்றி விளக்க உரையாற்றினார்.பயிற்சியில் விவசாயிகளுக்கு எள், ஆமணக்கு, நிலக்கடலை முதலிய பயிர்களுக்கு விதை நேர்த்தி, உயிர் உரங்கள் பயன்பாடு, களை நிர்வாகம், பயிர் பாதுகாப்பு, ஆமணக்கில் கவாத்து செய்வது ஆகியவை படக்காட்சி மூலம் விளக்கி பயிற்சியளிக்கப்பட்டது. சிறுகமணி வேளாண்மை அறியவில் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சகுந்தலை எண்ணெய் வித்து பயிர்களுக்கு களை நிர்வாகம், உர நிர்வாகம் பற்றி விளக்கி பேசினார்.உழவர் பயிற்சி நிலைய அலுவலர் கற்பகம் உதவி அலுவலர்கள் கல்பனா, ராதா, ராஜகோபால், கலைச்செல்வன், ரங்கநாதன், சுரேஷ்குமார் ஆகியோர் உட்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் முசிறி குணசீலம், கல்லூர், கோட்டாத்தூர், வேங்கைமண்டலம், திண்ணக்கோணம், கொடுந்துரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். துணை வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.