உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கம்-சமயபுரத்துக்கு நேரடி பஸ் விடணும்: மக்கள் கோரிக்கை

ஸ்ரீரங்கம்-சமயபுரத்துக்கு நேரடி பஸ் விடணும்: மக்கள் கோரிக்கை

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுத்திற்கு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரத்திற்கு நேரடியாக பஸ் வசதி கிடையாது. ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில், மாம்பழச்சாலை வழி, சத்திரம் பஸ் ஸ்டாண்டு செல்ல வேண்டும். இதனால் சிலர் சோர்வும் இன்னொரு முறை வந்தால் சமயபுரம் செல்லலாம் என்று அலுத்துக்கொள்ளும் பக்தர்களும் உள்ளனர்.எனவே, ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரத்திற்கு அரசு பஸ் இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். ஸ்ரீரெங்கநாதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்களில் 60 சதவீதத்திற்கு மேலானவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி விசாரித்து விட்டு செல்கின்றனர்.எனவே, திருச்சி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரத்திற்கு அரசு பஸ் இயக்கலாம். அவ்வாறு இயக்கப்படும் பட்சத்தில் அரங்கனின் பக்தர்களும் சமயபுரத்தாள் பக்தர்களும் மனம் குளிர்வார்கள் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை