உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கவுன்சிலர் உள்பட மூவர் "எஸ்கேப்

கவுன்சிலர் உள்பட மூவர் "எஸ்கேப்

திருச்சி: வாலிபரை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி அனிதா காலனி, வில்வ நகர் முருகேசன் (31). இவர் கடந்த 28ம் தேதி குட்ஷெட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 32வது வார்டு கவுன்சிலர் வெங்கட்ராஜ், சுரேஷ், முரளி ஆகிய மூவரும் அவரிடம் ரகளையில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. இதில் முருகேசன் தாக்கப்பட்டார். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் கண்டோண்மென்ட் போலீஸார், மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை