உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / உள்ளாட்சியில் போட்டியிட தே.மு.தி.க.,வினர் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சியில் போட்டியிட தே.மு.தி.க.,வினர் விண்ணப்பிக்கலாம்

திருச்சி: திருச்சி மாநகர தே.மு.தி.க., சார்பில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் விஜயராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவிப்பின்படி, திருச்சி மாநகர் மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான கவுன்சிலர் மற்றும் மேயர் விண்ணப்பம், மாநகர தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் நாளை (4ம் தேதி) காலை 11 மணி முதல் மாலை ஐந்து மணிவரையும், அதேபோல் வரும் 12ம் தேதி மாலை ஐந்து மணி வரை விண்ணப்பம் வாங்கப்படும்.

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 5,000 ரூபாய் செலுத்தியும், மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 15 ஆயிரம் விண்ணப்ப தொகை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் பொறுப்பாளராக தே.மு.தி.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை