| ADDED : செப் 03, 2011 12:28 AM
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பை நேற்று சென்னையில் துவக்கி வைத்தார். அதன்படி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள கதர் வாரிய தலைமை அலுவலகத்தில் அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பு அலுவலகத்தில் இதற்கான விழா நடந்தது. டி.ஆர்.ஓ., மாணிக்கம் தலைமை வகித்தார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,மனோகரன் முன்னிலை வகித்தார். விழாவில், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு கேபிள் சேவை குறித்து மாவட்ட இன்ஜினியர் ஜாகிர் உசேன் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் 550 கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் சேவையில் இணைத்துக் கொள்ள மனு செய்துள்ளனர். தற்போது, 160 கேபிள் ஆப்ரேட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக அனைவரும் சேர்க்கப்பட உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 96 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு கேபிள் உள்ளது. தற்போது 76 சேனல் ஒளிபரப்பாகிறது. அடுத்த சில நாட்களில் கட்டண சேனல்களும் சேவை திட்டத்ஒல் சேர்க்கப்படும் என்றார்.