உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி மேற்கு தொகுதியில் முதல் இடைத்தேர்தல்

திருச்சி மேற்கு தொகுதியில் முதல் இடைத்தேர்தல்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி உருவான பின் முதல் முறையாக இடைத்தேர்தலை தற்போது சந்திக்கிறது.கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்சி இரண்டவாது தொகுதி, 2008ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின் திருச்சி மேற்கு தொகுதியானது. இதுவரை 14 முறை தேர்தலை சந்தித்துள்ளது. தி.மு.க., 6 முø ற, அ.தி.மு.க., 5 முறை, இந்திய பொதுவுடமை கட்சி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது.மறுசீரமைப்புக்கு பின் திருச்சி மேற்கு தொகுதியில் திருச்சி தாலுகாவுக்குட்பட்ட ஒரு பகுதியிலும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு முதல் 42வது வார்டு வரையிலும், 44வது வார்டு முதல் 60வது வார்டு வரை இடம் பெற்றுள்ளன.கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மரியம்பிச்சை, தி.மு.க., நேரு, பாரதியஜனதா திருமலை உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.மொத்த 2 லட்சத்து 5 ஆயிரத்து 598 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 321 ஓட்டுகள் பதிவாகின. மரியம்பிச்சை 77 ஆயிரத்து 492 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் நேரு 70 ஆயிரத்து 313 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 338 தபால் ஓட்டுகள் விழுந்தன. இதில், ஒரு செல்லாத ஓட்டு.வெற்றி பெற்ற மரியம்பிச்சை சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். மரியம்பிச்சை கார் விபத்தில் இறந்ததால், இத்தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி மேற்கு தொகுதி ஏற்கனவே திருச்சி 2வது தொகுதியாக இருந்தபோது ஒரு முறை இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.கடந்த 1999ல் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொய்யாமொழி இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் முதல் முறையாக 2000ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் பொய்யாமொழியின் தம்பி பெரியசாமியும், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., ரத்தினவேலுவும் போட்டியிட்டனர். பெரியசாமி 19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தற்போது திருச்சி மேற்கு தொகுதி உருவாகி முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி மரியம்பிச்சை இறந்த பிறகு முதல் முறையாக திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி