உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துாய்மை நகர பட்டியலில் திருச்சி: மேயர் பெருமிதம்

துாய்மை நகர பட்டியலில் திருச்சி: மேயர் பெருமிதம்

திருச்சி:துாய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு கிடைத்த விருதை, நேற்று மேயர் அன்பழகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.மேயர் அன்பழகன் கூறியதாவது:வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு, நீர் நிலைகளின் துாய்மை, குடியிருப்பு பகுதிகளின் துாய்மை ஆகியவற்றில் திருச்சி முழு மதிப்பெண் பெற்றுள்ளது.திருச்சி மாநகராட்சி செயல்படுத்தும் திட்டங்களுக்கு, மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். விருது கிடைத்ததற்கு முக்கிய காரணம் அது தான். குப்பை சேகரிப்பு, குடியிருப்பு பகுதிகளின் துாய்மையும் மாநகராட்சி தேர்வுக்கு காரணமாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ