உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது

நிதி நிறுவன மோசடி மேலும் இருவர் கைது

திருச்சி: எல்.பின்., நிதி நிறுவன மோசடி வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் போன்ற இடங்களில் இயங்கி வந்த எல்.பின்., தனியார் நிதி நிறுவனம், முதலீட்டுக்கு இரட்டிப்பு தொகை மற்றும் இடம் தருவதாக கூறி, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. பின், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததால், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் முதலீட்டாளர்கள் புகார் செய்தனர். அதன்படி, 2019ல், திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அந்த நிறுவன இயக்குநர் அழகர்சாமி, ரமேஷ் உட்பட புரோக்கர்களாக செயல்பட்ட, 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருப்பூரைச் சேர்ந்த முத்து, 52, ஈஸ்வரன், 47, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ