மேலும் செய்திகள்
துாய்மைப் பணியாளர் காத்திருப்பு போராட்டம்
07-Oct-2026
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட்டில், ஜமீல் என்ற தனியார் இரும்பு நிறுவனத்தில், நான்கு நாட்களுக்கு முன், உ.பி.,யைச் சேர்ந்த கோவிந்தகுமார், 33, இரும்பு குழாய் தலையில் விழுந்து உயிரிழந்தார். இதற்கு, பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் எனக்கூறி, நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள் சிலரை, நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று காலை, திருச்சி – திண்டுக்கல் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், சிப்காட் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
07-Oct-2026