உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட கர்ப்பிணி கரு கலைந்தது

ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட கர்ப்பிணி கரு கலைந்தது

வேலுார்: ஓடும் ரயிலில் பலாத்கார முயற்சியை எதிர்த்து போராடிய கர்ப்பிணியை, ரயிலில் இருந்து வெளியே தள்ளியதில், அவரது கர்ப்பம் கலைந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி பெண்ணை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.திருப்பூரை சேர்ந்த 25 வயது பெண், நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.இவர், ஆந்திர மாநிலம் சித்துார் அருகேயுள்ள தாய் வீட்டுக்கு கடந்த, 6ம் தேதி கோவை - திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெண்கள் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.ஜோலார்பேட்டை ஸ்டேஷனில் மற்ற பயணியர் இறங்கிய நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்தார்.அப்போது, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ், பெட்டியில் ஏறி கர்ப்பிணியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார்.எதிர்ப்பு தெரிவித்தவரை, குடியாத்தம் - கே.வி.குப்பம் ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயிலில் இருந்து தள்ளி விட்டார். இதில், அப்பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட ஹேமராஜ் என்பவரை கைது செய்தனர்.இந்நிலையில், அப்பெண்ணின் கரு நேற்று முன்தினம் இரவு கலைந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.சென்னையிலிருந்து வந்த ரயில்வே அதிகாரிகள் நேற்று, பெண்ணிடம் நலம் விசாரித்து, ‍அவருக்கு கருணை தொகையாக அறிவித்த, 50,000 ரூபாயை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை