சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் கைது
வேலுார்: வேலுார் அருகே, சொத்து தகராறில் தம்பியை கொன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்செட்டிக்குப்பத்தை சேர்ந்த சகோதரர்கள் கார்த்திகேயன், 45, கவியரசன், 33; இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அப்போது கவியரசனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கார்த்திகேயன் தப்பினார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவியரசன் உயிரிழந்தார். குடியாத்தம் தாலுகா போலீசார் கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர்.