உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / ஆடையை களைந்த போலீஸ்காரர் ஸ்டேஷனில் ரகளை; பெண் போலீசார் ஓட்டம்!

ஆடையை களைந்த போலீஸ்காரர் ஸ்டேஷனில் ரகளை; பெண் போலீசார் ஓட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: வழக்குப் பதிய மறுத்த பெண் போலீஸ் முன், கான்ஸ்டபிள் ஒருவர் ஆடையை களைந்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.வேலூரின் விருதம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த கான்ஸ்டபிள் அருண் கண்மணி. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, மினி வேன் ஓன்று தன்னை இடிக்க வந்ததாகக் கூறி, அதன் டிரைவர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vax3kzmy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரைவரை மிரட்டி அழைத்துக் கொண்டு கே.வி., குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் காவலர் அருண் கண்மணி. டிரைவர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, பணியில் இருந்த பெண் போலீசார், இன்ஸ்பெக்டர் வரும்வரை காத்திருக்குமாறு தெரிவித்தனர்.இதனால், கோபமடைந்த அருண் கண்மணி, திடீரென தனது போலீஸ் ஆடையை கழற்றி, நிர்வாணமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ந்து போன பெண் போலீசார், ஸ்டேஷனை விட்டு உடனடியாக வெளியே ஓட்டம் பிடித்தனர்.பின்னர், அங்கிருந்த சக காவலர்கள், அருண் கண்மணியை சமாதானப்படுத்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவர் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனை நடத்த முயற்சித்தனர். அங்கும் ரகளையில் ஈடுபட்ட அருண் கண்மணி, மருத்துவமனையின் கண்ணாடிகளையும் உடைத்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார், அருண் கண்மணியை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், 'குடிபோதையில் பைக்கில் சென்ற கான்ஸ்டபிள் அருண் கண்மணி, வேன் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்,' எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Karthik
பிப் 27, 2025 20:57

செய்தி:: "அருண் கண்மணியை கைது செய்து, அவர் மீது பல்வேறு வழக்குகளை போலீஸ் பதிவு செய்தனர்". எப்படியும் ஒரு 10 கேஸு.. கேஸுக்கு குறைந்தது 5 செக்ஸன் = 50 செக்ஸனிலாவது அந்த போலீஸுக்கு தண்டனை உறுதி. பாக்கலாம் போலி சாரின் ஆட்டத்தை..


அப்பாவி
பிப் 27, 2025 19:57

திருட்டு திராவிடன்களை காசு வாங்கிட்டு வேலைக்கு வெச்சா இப்பிடித்தான். டிஸ்மிஸ் செஞ்சு சோத்துக்கு அலைய உடணும்.


Sampath Kumar
பிப் 27, 2025 19:56

ஒன்னும் இல்லை வெயில் நகரம்.வெயில் ஜாஸ்தி ஆகி விட்டதால் வந்த வினை அம்புட்டு தான்


Karthik
பிப் 27, 2025 20:45

சூடு அதிகமாயிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க.. அதானே..?? புரிஞ்சுது.. புரிந்தவன் பிஸ்தா..


Kasimani Baskaran
பிப் 27, 2025 19:15

மேல் இருந்து கீழ் மட்டம் வரை அனைவருக்கும் தாங்கமுடியாத அளவுக்கு மன அழுத்தம்... ஒரு சிலர் மனச்சாட்சியை மூட்டை கட்டி வைத்து வேலை செய்பவர்கள் தவிர அனைவருக்கும் சிக்கல்.


MARUTHU PANDIAR
பிப் 27, 2025 22:06

இந்த சப்பை கட்டு எல்லாம் வேண்டாம் . =இது போன்ற ஆட்கள் எந்த அடிப்படையில், தகுதியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்று பார்த்தால் போதும் ..சாயம் வெளுத்து விடும் .இந்த நாட்டின் தலை விதி .இன்னும் என்னென்ன அசிங்கம் எல்லாம் அரங்கேறப் போகுதோ ?


naranam
பிப் 27, 2025 15:51

தந்தை அப்பா வழி வந்த திராவிடர்கள் போலிருக்கிறது.


Nandakumar Naidu.
பிப் 27, 2025 14:55

அப்பா ஆட்சியில் யாரும் பயப்பட வேண்டாம். உலகமே வியக்கும் அளவுக்கு ஆட்சி நடக்கிறது. 2026 லிலேயும் வாக்களியுங்கள் மக்களே. விளங்கிடும் தமிழகம்.


Anantharaman Srinivasan
பிப் 27, 2025 14:35

எங்கள் அப்பா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அவனவன் கையில். தப்பித்தவறி 2026 எங்க அண்ணன் உதயநிதி முதல்வரானால் சட்டம் ஒழுங்கு இன்னும் திமிர் எடுத்து ஆடும்.


Sidharth
பிப் 27, 2025 12:39

கைதா? அவர் சாதுவாக போறவரூங்க


Anand
பிப் 27, 2025 12:34

மாடல் ஆட்சியில் புது புது யுக்திகள் கையாளப்படுகிறது...


vels
பிப் 27, 2025 12:25

உடனே திராவிட மாடலை பார்த்தீரா என்பார்கள். ஒரு பொருக்கி செய்வதை வழக்கு போட்டு நடைமுறை படுத்த முடியும். நாமும் திருந்த முயற்சிக்க வேண்டும்


sridhar
பிப் 27, 2025 16:53

அதிமுக ஆட்சியில் திமுக இதுபோன்ற விஷயங்களில் என்ன செய்தது .


Anantharaman Srinivasan
பிப் 27, 2025 23:25

பொறுக்கி எப்படி போலீஸ் ஆனான்.? போலீசுக்கு Select ஆனதெப்படி..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை