நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
வேலுார் : வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வேலம்பட்டு கேட்டை சேர்ந்தவர் தொழிலாளி மணிகண்டன். இவரது மகள் பிரித்தி ஷா, 8, மகன் ஈஸ்வர், 5. மணிகண்டன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக வீட்டின் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு, பள்ளம் தோண்டியிருந்தார். பள்ளத்தில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீர் நிரம்பியிருந்தது. நேற்று மாலை, விளையாடிக் கொண்டிருந்த பிரித்திஷா, ஈஸ்வர், பள்ளத்தில் நிரம்பிய நீரில், தவறி விழுந்து, மூழ்கி இறந்தனர். லத்தேரி போலீசார் விசாரிக்கின்றனர்.