மேலும் செய்திகள்
பி.எம்.டி.சி., பஸ்சில் பாம்பால் பயணியர் 'கிலி'
08-Sep-2024
ஒடுகத்துார்: வேலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அணைக்கட்டு, தார்வாழி, ஒடுகத்துார், காடிக்குடி பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இந்நிலையில், ஒடுகத்துாரில் இருந்து வேலுாருக்கு 30க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு பஸ் இரவு, 9:00 மணிக்கு சென்றது. அப்போது, தார்வாழி அருகே சென்றபோது பஸ் மீது புளியமரம் விழுந்தது. இதனால் பயணியர் அலறினர்.எனினும், காயமின்றி அனைவரும் தப்பினர். மாற்று பஸ்சில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார், பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
08-Sep-2024