உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தமிழகத்தில் தினமும் கொலை நிலவரம் வெளியிடும் நிலை வேலுாரில் அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., காட்டம்

தமிழகத்தில் தினமும் கொலை நிலவரம் வெளியிடும் நிலை வேலுாரில் அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., காட்டம்

வேலுார்: ''தினமும் கொலை நிலவரம் வெளியிடும் நிலைக்கு, தமிழக நிலை உள்ளது,'' என, அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., பேசினார்.அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய, மண்டல மாநாடு வேலுார் கோட்டை மைதானத்தில் 'இலக்கு - 2026' என்ற தலைப்பில் நேற்று நடந்தது. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்-சர்கள் வீரமணி, ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்-ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பொது செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., குரலை அ.தி.மு.க., ஒலிப்பதாக பேசுகிறார். நாங்கள் யாரையும் கூட்டணி சார்ந்தில்லை. எங்களை நாடித்தான் எல்லோரும் வருவர். நாங்கள் தேர்தல் சமயத்தில் ஓட்-டுகள் சிதறாமல் இருக்க, கூட்டணி அமைக்கிறோம். அ.தி.மு.க., மக்களை நம்பியுள்ள கட்சி, தி.மு.க., கூட்டணியை நம்பியுள்ள கட்சி. தி.மு.க., அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணியில் ஒற்று-மையில்லை, சிதறி வருகிறது. 'இண்டி' கூட்டணியிலுள்ள ஸ்டாலின், கருணாநிதி நாணயம் வெளியிட பா.ஜ., மத்திய அமைச்சரை அழைக்கிறார். இரட்டை வேடம் போடும் கட்சி, தி.மு.க.,தான். எதிர்கட்சியாக இருந்தபோது கறுப்பு பலுான் பறக்க விட்டு, 'கோ பேக் மோடி' என்றவர், தற்போது ஊழலில் சிக்கக்கூடாது என 'வெல்கம் மோடி' என்கிறார். ஊழல் குற்றச்சாட்டு பயத்தில் வெள்ளைக்குடை பிடிக்கிறார். ஸ்டாலி-னுக்கு 'வெள்ளைக்குடை வேந்தன்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும். மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், தி.மு.க.,வின், 39 லோக்சபா உறுப்பி-னர்கள் நிதியை பெற லோக்சபாவில் அழுத்தம் கொடுக்க-வில்லை. மத்திய அரசு தமிழகத்தில் ஆளும் கட்சியை பார்க்க வேண்டாம். ஏழை மக்களை பார்த்து, நுாறு நாள் வேலை திட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அனைவரும் தன்னை, 'அப்பா' என அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் தான் அதிகளவில் இளம் சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அப்-போது இளம்பெண்களும், சிறார்களும், 'அப்பா, அப்பா' என, கதறுவது, முதல்வர் காதில் கேட்கவில்லையா. தமிழகத்தில், 2025 ஜன., 1 முதல், பிப்.,14ம் தேதி வரை, 107 போக்சோ வழக்குகளும், 56 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளதாக வழக்குகளும் பதிவாகி உள்ளன. தி.மு.க., பதவிக்கும், அதிகாரத்திற்கும் வர அடிக்கடி நிறம் மாறும் கட்சி. கூட்டணி வேறு, கொள்கை வேறு. 2026 சட்டசபை தேர்தலை வலுவான கூட்டணியுடன் சந்திப்போம். தினமும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் கூறுவதுபோல், தமிழகத்தில் தினமும் கொலை நில-வரம் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை