உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்

வேலுார் : வேலுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி, மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலுாரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து வருகிறது. நேற்று ரங்காபுரத்தில், 23, 24வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., கார்த்திகேயன், ஆணையர் லட்சுமணன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். அப்போது, வேலுார் மாநகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுதாகர், மூலக்கொல்லை மாதா கோவில் தெருவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் சேர்ந்து, 'பட்டா கொடு' என்ற பதாகையுடன் முகாம் நடக்கும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், அப்பகுதியில் போதுமான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தினார். எம்.எல்.ஏ., கார்த்திகேயன், அனைத்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு, கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை